
தமிழ் திரையுலகின் முன்னணி வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். சொந்தமாக படங்களும் தயாரித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் பிசியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜுக்கும் பழைய கவர்ச்சி நடிகை டிஸ்கோசாந்தியின் தங்கை லலிதகுமாரிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரி குடும்ப நல கோர்ட்டில் லலிதகுமாரி மனுதாக்கல் செய்தார். பதிலுக்கு பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து பிரகாஷ்ராஜ் மாதம் தோறும் தனக்கு ரூ. 1 1/2லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று லலிதகுமாரி இன்னொரு மனுதாக்கல் செய்தார்.
குடும்ப நல கோர்ட்டின் சமரச மையத்தினர் இருவரையும் நேரில் அழைத்து இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தினர்.
இன்று இவ்வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் லலிதகுமாரி இருவரும் ஆஜரானார்கள். பிரகாஷ்ராஜ் தாக்கல் செய்த மனுவில் நானும், என் மனைவியும் ஒருமித்த கருத்தோடு பரஸ்பர உடன்பாட்டில் விவாகரத்து பெற விரும்புகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து இவ்வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
வழக்கு விசாரணையை இன்று மாலைக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இருவரும் சேர்ந்து விவாகரத்து கேட்பதால் விரைவில் விவகாரத்து கிடைக்கும் என்று தெரிகிறது. பின்னர் பிரகாஷ்ராஜும், லலிதகுமாரியும் ஒரே காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். மதிய உணவும் சாப்பிட்டனர்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment