Monday, January 25, 2010

ஹைதி பூகம்ப இடிபாடுகளில் சிக்கி 10 நாட்களாக சிறுநீர் குடித்து உயிர் பிழைத்தவர் மீட்பு


ஹைதி நாட்டில் கடந்த வாரம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதில் சர்வதேச நாடுகளின் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் போர்ட்- அவ்-பிரின்ஸ் நகரில் இடிபாடுகளை அகற்றுவதில் இஸ்ரேலிய நாட்டு குழுவினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இடிபாடுகளில் ஒரு வாலிபர் சிக்கி உயிருக்கு போராடுவது தெரிய வந்தது. அவரது பெயர் புசோ.

பூகம்பத்தில் வீடு இடிந்ததும் அவரது தாய் தப்பி விட்டார். புசோ மட்டும் படுக்கை அறையில் இருந்தார். இடிபாடுகளில் சிக்கி கொண்டார். நேற்று மீட்பு குழுவினர் அவரை நெருங்கிவிட்டனர். புசோ அபயகுரல் எழுப்பினார். 10 நாட்களுக்கு பின் அவரை மீட்டனர். அவர் 10 நாட்களாக தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார். அவரது உடல் நிலை சோர்வாக இருந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது தாய் கூறும்போது, புசோ இறந்துவிட்டார் என்று நினைத்தோம். ஆனால் உயிர் பிழைத்தது அதிசயமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. அவரது உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லை. நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். முழு அளவில் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக சொன்னார்.

இதே போல் 84 வயது பெண் ஒருவரும் உயிரோடு மீட்கப்பட்டார்.

சர்வதேச மீட்பு குழுவினர் இதுவரை 125 பேரை உயிருடன் மீட்டு உள்ளதாக ஐரோப்பா கமிஷன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

No comments: