Friday, January 22, 2010

13 வயது அணியில் கிரிக்கெட் ஆடிய தெண்டுல்கர் மகன் - ஒரு ரன் எடுத்ததற்கே இந்த கூத்தா? ஐயோ ஐயோ


ஒரு ரன் எடுத்ததற்கே இந்த கூத்தா? ஐயோ ஐயோ

13 வயது அணியில் இடம் பெற்று தெண்டுல்கர் மகன் கிரிக்கெட் ஆடினான். இந்திய நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்காரர் தெண்டுல்கருக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.

இதில் அர்ஜுனுக்கு 10 வயது ஆகிறது. தந்தையைப் போலவே தானும் கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்ற ஆசை. எனவே தெண்டுல்கர் மகனையும் கிரிக்கெட்டில் சேர்த்து விட்டுள்ளார்.

தந்தையை போலவே அர்ஜுனும் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே கிரிக்கெட் அணிகளிலும் இடம் கிடைத்து வருகிறது.

தற்போது மராட்டிய மாநிலம் புனேயில் எப்.ஐ.ஜி. கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கேடன்ஸ் கோப்பை தேசிய கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் ஒரு அணியில் அர்ஜுனுக்கும் இடம் கிடைத்து உள்ளது.

போட்டியில் ஆடுவதற்காக அர்ஜுன் தனது தாயார் அஞ்சலியுடன் புனே வந்திருக்கிறார்.

அவரது அணியும், மற்றொரு அணியும் மோதிய 30 ஓவர் போட்டி நடந்தது. அர்ஜுன் தொடக்க வீரராக களம் இறங்கினார். முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கவில்லை. 2-வது ஓவரில் அர்ஜுன் தனது தந்தையின் அதே ஸ்டைலில் பந்தை லாவகமாக அடித்து ஒரு ரன் எடுத்தார்.

அடுத்து இன்னொரு பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். ஆனால் எதிர்முனையில் இருந்த வீரர் சரியாக ஓடாமல் குழப்பி விட்டார். இதனால் அர்ஜுன் ரன்அவுட் ஆனார். கடைசியில் அவர் அணி தோற்றுவிட்டது.


தனது அணிக்காக அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போய் விட்டதே என்று அர்ஜுன் வேதனை அடைந்தார். அவருக்கு தாயார் அஞ்சலி ஆறுதல் கூறி தேற்றினார்.

இந்த போட்டியில் ஆடு வதற்காக அர்ஜுன் 5 மாதமாக பயிற்சி பெற்று வந்தார். அர்ஜுன் வழக்கமாக நன்றாக ரன் எடுப்பாராம். ஆனால் இந்த போட்டியில் தான் அவர் ரன் எடுக்க முடியாமல் போய்விட்டது.

தந்தையை போல் இல்லாமல் அர்ஜுன் இடக்கை ஆட்டக்காரர். பேட்டிங்குடன் பந்துவீச்சும் நன்றாக வருகிறது. இடக்கையால் பந்து வீசுகிறார். மீடியம் வேகப்பந்து வீச்சாளராக செயல்படுகிறார்.

அர்ஜுன் 1999-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி பிறந்தார். அப்போது தெண்டுல்கருக்கு விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது கிடைத்தது. எனவே மகனுக்கு அர்ஜுன் என்று பெயர் சூட்டினார்.

தெண்டுல்கர் தனது 16 வயதில் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். அர்ஜுனும் 16 வயதில் தேசிய அணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

1 comment:

priyamudanprabu said...

சச்சின் முதல் தேசிய போட்டியி 0 ரந்தான் எடுத்தார்