Thursday, January 28, 2010

தீய சக்திகளிடம் இருந்து விடுபட தினமும் ஒரு ஆட்டை பலி கொடுக்கும் சர்தாரி: பாகிஸ்தான் அதிபரின் மூட நம்பிக்கை


பாகிஸ்தானில் முஷரப்பை அதிரடியாக விரட்டிவிட்டு அதிபர் பதவிக்கு வந்தவர் ஆசிப் அலி சர்தாரி. பெனாசிரின் கணவரான இவர் ஊழல் செய்வதில் உலகப்புகழ் பெற்றவர். எந்த வேலையாக இருந்தாலும் அதில் 10 சதவீதம் கமிஷன் எடுத்துக்கொள்வார். இதனால் அவரை மிஸ்டர் டென் பெர்சண்ட் என்ற ழைக்கிறார்கள்.

பெனாசிர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குருட்டு அதிர்ஷ்டத்தில் 2007-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்து விட்ட சர்தாரி தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள சில மூட நம்பிக்கைகளை கடை பிடிக்கிறார். தீய சக்திகள் தன் ஆட்சியைப் பறித்து விடும் என்று அவர் பயப்படுகிறார்.

மூட நம்பிக்கைகளின் ஒட்டு மொத்த உருவாக திகழும் அவர் ஒட்டகப் பால் மட்டுமே குடிக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் தனக்கு எதிராக யாராவது தீய சக்திகளை தூண்டி விட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தினமும் பரிகாரம் செய்கிறார்.

அவர் தினமும் ஒரு கறுப்பு ஆடு பலியிடுவதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியாகும் டான் நியூஸ் பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. தீய சக்திகள் எந்த ரூபத்திலும் தன்னை நெருங்கா மல் இருக்க அவர் ஆடு பலியிடுகிறார். இதற்காக அவரது உதவியாளர் பாய்கான் கிராமம், கிராமமாக போய் கறுப்பு ஆடுகளை தேடிப் பிடித்துக் கொண்டு வருகிறார். அவருக்கு ஆடு பிடிப்பதுதான் முக்கிய வேலையாக கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் ஆடு பலி கொடுக்கப்படும் முன்பு சர்தாரி முன்பு கொண்டு போய் நிறுத்தப்படும். அந்த ஆட்டை சர்தாரி தடவிக் கொடுப்பார். பிறகு அந்த ஆடு தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பலி கொடுக்கப்படும்.

சர்தாரியின் இந்த மூட நம்பிக்கை மிருக நல ஆர் வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை சர்தாரிக்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. சர்தாரியின் செய்தித் தொடர் பாளர் பர்கதுல்லா ஆடு பலி கொடுக்கப்படுவதை ஒத்துக்கொண்டார்.
சர்தாரி இந்த பழக்கத்தை நீண்ட நாட்களாக கடை பிடித்து வருவதாகவும், இதில் மூட நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.

1 comment:

சாமக்கோடங்கி said...

இவனுகளை எல்லாம் உயிரோட எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்து எடுக்கனும்..

நன்றி...