இலங்கை தமிழர்களுக்காக சென்னை சாஸ்திரி பவன் முன்பு சென்னை கொளத்தூரை சேர்ந்த முத்துக்குமார் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். அவர் உயிர் தியாகம் செய்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொளத்தூரில் இன்று நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. குமரன் நகரில் உள்ள முத்துக்குமார் வீட்டின் முன்பு 19 அடி உயரத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டு இருந்தது.
அதில் முத்துக்குமார் உள்பட ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த 19 பேரின் உருவ படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த நினைவுத்தூணுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நல்லக்கண்ணு, மகேந்திரன் மற்றும் பா.ஜனதா துணை செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வட சென்னை மாவட்ட தலைவர் பிரகாஷ், ஆதிகேசவன், கருணாநிதி, ஏழுமலை, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சத்யராஜ், டைரக்டர் சீமான், புலமைபித்தன், கவிஞர் தமிழருவி மணியன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக முத்துக்குமாரின் தந்தை குமரேசன், தங்கை தமிழரசி, மற்றும் குடும்பத்தினர் மலர் தூவினர். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் பால்கனகராஜ், மா. நடராஜன், ம.தி.மு.க.வை சேர்ந்த சோமு, ஜீவன், மணிமாறன், செங்குட்டுவன், மனோகரன், வக்கீல் நன்மாறன், குமரி விஜயகுமார், ருக்மணி ராஜா, குமரிஅருண், புகழேந்தி தங்கராஜ் உளபட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் இருந்து முத்துக்குமார் நினைவு ஜோதி கொளத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முத்துக்குமார் தீக்குளித்து இறந்த சாஸ்திரி பவனில் தடையை மீறி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வேலு மணி தலைமையில் உள்ளே நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சாஸ்திரி பவன் முன் உள்ள ரோட்டுக்கு முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
முத்துக்குமார் நினைவு நாளையொட்டி மாலை 6 மணிக்கு பெரவள்ளூர் சதுக்கத்தில் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள். தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் கூட்ட ஏற்பாடுகளை செய்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் தங்கசாலையில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் பேசுகிறார்.

No comments:
Post a Comment