Thursday, January 28, 2010

http://mukkiaseidhigal.blogspot.com/2010/01/blog-post_4057.html


ஆலந்தூர் தாடி ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 27). பட்டதாரி பெண்ணான இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் திருச்சியை சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எனது பெற்றோர் 70 பவுன் நகையும், 3 கிலோ வெள்ளிப் பொருட்களையும் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணம் முடிந்து திருச்சியில் இருந்தபோது எனது மாமியார் நகைகளை வாங்கிக் கொண்டார்.

அதன் பிறகு கணவருடன் சென்னை ஆலந்தூரில் வசித்து வந்தேன். என் கணவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் என் கணவரின் தங்கை கணவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. எனவே என்னிடம் கூடுதல் வரதட்சணை பணம் கேட்டு கணவர் மற்றும் அவரது வீட்டார் சித்ரவதை செய்தனர். என் கணவரின் தம்பி என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். என்னை பட்டினி போட்டு சித்ரவதை செய்தனர்.

திருச்சியில் கணவர் வீட்டார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வருகிறார்கள். அதற்காக எனது வீட்டில் சென்று ரூ.3 லட்சம் பணம் வாங்கி வருமாறு கூறினார்கள். நான் மறுக்கவே என்னை கணவர் எனது தாய் வீட்டில் கொண்டு விட்டுவிட்டார். ரூ.3 லட்சம் பணத்துடன் வந்தால் குடும்பம் நடத்தலாம். இல்லாவிட்டால் அங்கேயே இருந்து விடு என்கிறார்கள். எனது கணவரின் நண்பர்களும் எனக்கு போன் செய்து கேலி கிண்டல் செய்கிறார்கள்.

என்னை சித்ரவதை செய்யும் எனது கணவர் பிரபாகர், அவரது தந்தை ஏழுமலை, தாய் பானுமதி, தம்பி நந்தகுமார், தங்கை கவிதா, அவரது கணவர் லோகநாதன், உறவினர் கிருஷ்ணவேணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க பரங்கிமலை மகளிர் போலீசுக்கு புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மல்லிகா, சப்- இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரமாதேவியின் கணவர் பிரபாகரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகிறார்கள்.

1 comment:

Suresh Ram said...

http://ipc498a-தகனமேடை
ஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும்
http://ipc498a-misuse.blogspot.com/