
நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த ரசிகை விஷம் குடித்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவருக்கு ஆந்திராவில் ஏராளமான ரசிகை பட்டாளம் உண்டு. இந் நிலையில் அவர் லட்சுமி பிரணதி என்ற பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த திருமண செய்தியை தெலுங்கு தனியார் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின.
இதைப்பார்த்த கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர். ரசிகை அஞ்சனாதேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கடந்த சில மாதங்களாக தனது தோழிகளிடம் ஜூனியர் என்.டி.ஆர். போன்றவரைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தார். இதனால் அவரது கனவு தூள் தூளானது.
நீண்ட நேரம் கவலையில் மூழ்கிக்கிடந்த அவர் திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
மயங்கிய நிலையில் இருந்த அவரை பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment