
நேற்று முன்தினம் மாலையில் சோணை கருப்பணனுக்கு செய்முறை விழா தொடங்கியது. இதில் பக்தர்கள் 2 ஆயிரம் மதுபாட்டில்களை செய்முறையாக (காணிக்கை) வழங்கினர். மதுபாட்டில்களை வழங்கும் பக்தர்களின் பெயர், ஊர், மதுபான அளவு போன்றவை குறித்தும் கோயில் நிர்வாகத்தினர் செய்முறை நோட்டில் எழுதி வைத்தனர். இந்த மதுபானங்களை கோயில் மூலஸ்தானத்தில் அடுக்கி வைத்து சாமிக்கு படையல் போட்டு பூஜை நடந்தது. பின்னர் கோயிலில் வாணவேடிக்கை நடந்தது. தொடர்ந்து கோயில் கதவுகளை சாத்திக் கொண்டு சாமியின் முன்புறம் உள்ள ஒரு சிறிய குடுவையில் ஒவ்வொரு பாட்டிலாக உடைத்து ஊற்றினர். இதில் ஊற்றப்படும் மதுபானம் எங்கு செல்கிறது என்பதை யாரும் அறிய முடியவில்லை. இந்த பூஜை நேற்று அதிகாலை வரை நடந்தது. விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மது பாட்டில்களுடன் குவிந்தனர்.
No comments:
Post a Comment