Friday, October 30, 2009

கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த பாக்., பயங்கரவாதிகள்



கடலில் நீந்தி பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பி விட்டார்கள் என்பதை நம்ப முடியவில்லை. உண்மையா? பொய்யா?

காந்திநகர்: குஜராத் மாநில கடல் எல்லை அருகே கடல் பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்ற போது கடலில் குதித்து தப்பினர். இந்தியாவில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது., அமெரிக்க உளவு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 26 / 11 மும்பை தாக்குதல் நாள் நெருங்கி வரும் வேளை என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நேரத்தில் இந்திய கடல்பகுதியில் பாதுகாப்பில் இருந்த பாதுகாப்பு படையினர் குஜராத் கட்ச் மாவட்டம் அருகே சர் கிரீக் கடல் பகுதியில் ஒரு மர்ம படகு வந்ததை கண்டனர். இதில் இருப்பவர்கள் யார் என கண்டறிய அந்த படகு நோக்கி விரைந்தனர். இந்நேரத்தில் பாதுகாப்பு படையினர் வருவதை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து நீச்சலடித்து தப்பி விட்டனர். அவர்களை பிடிக்க முடியவில்லை. படகு மட்டும் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப்படகு பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது கடல் மார்க்கமாகத்தான் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இதே போல் தற்போது வந்தவர்கள் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருக்கலாம் என பாதுகாப்பு படை வட்டாரம் தெரிவிக்கிறது.
காஷ்மீர் எல்லையில் 2 பேர் சுட்டு கொலை : இதற்கிடையில் காஷ்மீரில் பந்திப்பூரா பகுதியில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளிடம் இருந்து நவீனரக செல்போன் ஆயுதங்கள் இருந்தது. கெரன் பகுதியில் நுழைய முயன்ற 2 பயங்கராவதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவ அடையாள அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Source: http://www.dinakaran.com

No comments: