Friday, September 26, 2008

காரில் 45 பேரை ஏற்றிச் சென்று திருச்சி இளம்பெண்


திருச்சி: "மாருதி 800' காரில் 45 பேரை ஏற்றிக் கொண்டு காரை
ஓட்டிச் சென்ற திருச்சியை சேர்ந்த இளம்பெண், சாதனை முன்னோட்ட
முயற்சியில் ஈடுபட்டார்.திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் பூங்கொடி,
அபிராமி டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். "வரும் 28ம் தேதி
திருச்சி சக்தி ரோட்டரி சங்கம், தாய்க் குகாய் கராத்தே பயிற்சி
பள்ளியுடன் இணைந்து "மாருதி 800' காரில் 45 பேரை அமரச்செய்து,
ஓட்டிச் சென்று சாதனை படைப் பேன்' என்று பூங்கொடி
அறிவித்துள்ளார்.திருச்சி என்.எஸ்.பி., சாலையில் வரும் 28ம் தேதி
காலை 7 மணி முதல் 8 மணிக்குள் இந்த சாதனை நிகழ்ச்சியை நடத்தப்
போவதாக அறிவித்துள்ளார்.


அதற்கு முன்னோட் டமாக நேற்று காலை திருச்சி வெக்காளியம்மன்
கோவில் அருகில் இருந்து, காரில் 45 பேரை அமரச் செய்து 1 கி.மீ.,
தூரம் வெற்றிகரமாக ஓட்டினார். நேற்று காலை நடந்த முன்னோட்ட
நிகழ்ச்சியில் சக்தி ரோட்டரி சங்கத் தலைவர் அகிலா, லிம்கா உலக
சாதனையார் ஜெட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சென்னையைச்
சேர்ந்த கிரிபக்ரி,' 95ம் ஆண்டு ஒரே காரில் 42 பேரை ஏற்றி வலம்
வந்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித் துள்ளார். வரும்
28ம் தேதி பூங்கொடி இந்த சாதனையை நிகழ்த்தினால் லிம்கா சாதனை
புத்தகத்தில் இடம் பெறுவார்.

No comments: