லண்டன்: பிரிட்டனில் "எஸ் 1' என்ற எண் கொண்ட வாகன நம்பர்
பிளேட், 3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின், எடின்பர்க் நகரில் வாகனங்களின்,
"நம்பர் பிளேட்'களில் எழுதப்பட வேண்டிய எண்கள் சமீபத்தில் ஏலத்
தில் விடப்பட்டன. ராசியான எண்கள் கொண்ட நம்பர் பிளேட்கள் அதிக
விலைக்கு ஏலம் கேட்கப் பட்டன. அதிகபட்சமாக "எஸ் 1' என்ற எண்
கொண்ட நம்பர் பிளேட், மூன்று கோடி ரூபாய்க்கு ஏலம்
எடுக்கப்பட்டது.
ஏலம் எடுத்தவர் கூறியதாவது: நான் புதிதாக ஒரு காரை
வாங்கியுள்ளேன். அதன் விலை 17 லட்சம் ரூபாய். தற்போது ஏலம்
எடுத்த நம்பர் பிளேட்டை அந்த காருக்கு பயன்படுத்த
திட்டமிட்டுள்ளேன். கார் விலையை விட, நம்பர் பிளேட் விலை அதிகம்
தான். இருந்தாலும் இந்த எண்ணுக்காக எவ்வளவு விலை வேண்டுமானாலும்
கொடுக்க தயாராக உள்ளேன் என்றார். இந்த நம்பர் பிளேட்டின் விலை,
விலை உயர்ந்த பல சொகுசு கார்களின் விலையை விட அதிகம்.
No comments:
Post a Comment