Friday, September 26, 2008

குடி'மகன்களில் ஒன்பது வகை உண்டு

லண்டன்: பிரிட்டனில் ஒன்பது வகையாக "குடி' மகன்களை
பிரித்துள்ளனர். அவர்கள் யார் யார்?

மன அழுத்த குடியர்: மன அழுத்தம் போவதற்காக குடிப்பவர். அழுத்தத்
தால் பாதிக்கப்பட்ட இவர்கள் அமைதிக்காக குடிக்கின்றனர்.


வாழ்க்கை வசதி வேண்டி குடிப்பவர்கள்: சாதாரண
வேலையில் இருக்கும் ஊழியர், தொழிலாளர்கள், தங்கள் வாழ்க் கையில்
வசதி வேண்டி குடிப்பவர்கள் இவர்கள்.


"டைம் பாஸ்' குடியர்கள்: போரடிக்கிறது என்று
நேரத்தை போக்க ஜாலியாக குடிப்பவர்கள் இந்த ரகம்.


டிப்ரஷன் குடியர்: சமூக பொருளாதார சூழ் நிலை
காரணமாக, டிப்ரஷனால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்.


நட்பு வேண்டி குடிப்பவர்கள்: உறவு, நட்பு
கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள்.


சமுதாய குடியர்: அடித்தள மக்கள் இவர்கள்.
சுற்றியுள்ளவர்களின் நட்புக்காக குடிப்பவர்கள்.

டைவர்ஸ் குடியர்: விவாகரத்து செய்ததால்
குடிப்பவர்கள். இதில் வயதானவர்கள் தான் அதிகம்.


குஷி குடியர்: எந்த கவலையும் இல்லாமல்,
எந்நேரமும் "பப்"களில் வலம் வந்து குடிக்கும் இளைய
தலைமுறையினர்.

வார இறுதி குடியர்: வார இறுதியில் மட்டும்,
விழா நாட்களில் மட்டும் குடிப்பவர்கள்.
பிரிட்டன் சுகாதாரத்
துறை இந்த அடிப்படையில், மதுவிலக்கு பிரசாரத்தை தனித்தனியாக
இவர்களிடம் மேற்கொள்ள உள்ளது.

No comments: