Friday, September 26, 2008

நிலத்தில் மேய்ந்த கழுதைக்கு சிறை

எகிப்து நாட்டில், விவசாய ஆராய்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான நிலத்தில், சோளக்கதிரை திருட் டுத்தனமாக தின்ற கழுதைக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.கெய்ரோவில், நிலே டெல்டாவில் அரசு விவசாய ஆராய்ச்சிக் கழகம் செயல்பட்டு வருகிறது. இக்கழகத்துக்கு சொந்தமான நிலத்தில், பல்வேறு பயிர்கள் வளர்க்கப் பட்டு வருகின்றன.சோளம் வளர்க்கப் பட்டு வந்த பகுதியில், அடிக்கடி சோளக்கதிர்கள் சேதமடைவதை அறிந்த நிர்வாகம், சேதப்படுத்துவது யார் என்று கண்காணித்தது. அப்போது, ஒரு கழுதை சோளக்கதிரை திருட்டுத்தனமாக தின்பதையும், அதற்கு அதன் உரிமையாளர் துணை போவதும் தெரியவந்தது. சிறையில் கழுதை : இதையடுத்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், கழுதையையும், உரிமையாளரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த கோர்ட், கழுதைக்கு 24 மணி நேர சிறை தண்டனையும், உரிமையாளருக்கு 50 எகிப்திய பவுண்டுகளை அபராதமாகவும் விதித்தனர். இதன் படி, சிறையில் கழுதை அடைக்கப்பட்டது.

No comments: