மூடை தூக்கி வாழ்க்கை நடத்தும் மல்யுத்த தேசிய சாம்பியன்
திருவனந்தபுரம்: புஜ பலம் காட்டும் மல்யுத்தத்தில், மூன்று முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றவர், மூடை தூக்கி வாழ்க்கை நடத்துகிறார். கனடாவில் நடக்கும் உலகப் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருந்தும், போதிய நிதி வசதி இல்லாமல் தவிப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியானதை அடுத்து, பல தரப்பிலிருந்தும் நிதி குவிகிறது. கேரளாவில் உள்ளது கொச்சி நகரம். இங்குள்ள பிரதான மார்க்கெட்டில், மூடை தூக்கும் லோடுமேனாக இருப்பவர் சினிபு எஸ்.ரவி (வயது 24). டாக்சி டிரைவரின் மகன் சிமென்ட், அரிசி என, பல வகையான மூடைகளை தூக்கி நாள் ஒன்றுக்கு 220 ரூபாய் சம்பாதிக்கிறார்.
புஜ பலம் காட்டும் மல்யுத்தத்தில் (ஆர்ம் - ரெஸ்லிங்), இவர் மூன்று முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றவர். கனடாவில் நவம்பர் மாதம் நடக்க உள்ள உலக சாம்பியன் பட்டப் போட்டியில் பங் கேற்க ஆர்வமாக உள்ளார். தன்னுடைய இந்தக் கனவை நிறைவேற்றவும், கனடாவுக்கு செல்வதற்காக டிக்கெட் வாங்கவும், மற்ற பல செலவுகளுக்காகவும் அவர் தற்போது கூடுதல் நேரம் மூடை தூக்கிக் கொண்டிருக்கிறார். கனடா சென்று வர அவருக்கு 1.80 லட்சம் ரூபாய் செலவாகும். இருந்தாலும், சம்பாதிக்கும் பணத்தில் பாதி வாழ்க்கைச் செலவுக்கே சரியாகி விடுவதால், உலகப் போட்டி யில் பங்கேற்பது என்ற, தன் கனவு நனவாகுமா என்ற கவலை அவரையும், அவரின் பயிற்சியாளர் முகுந்த குமாரையும் ஆட் கொண்டது. தங்களின் ஆதங்கத்தை பலரிடம் வெளிப்படுத்தினர். உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரித்துள்ள விளையாட்டுப் போட்டிகளில் ஆர்ம் - ரெஸ்லிங் இடம் பெறாததால், விளையாட்டு அமைப்புகள் எல்லாம் இவருக்கு உதவி செய்ய மறுத்து விட்டன. இதனால், பகலில் அதிக நேரம் மூடை தூக்கி சம்பாதிக்கும் ரவி, இரவில் தன் பயிற்சியை மேற் கொண்டுள்ளார்.இதுதொடர்பான செய்தி, ஓரிரு நாட்களுக்கு முன், டில்லியில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதையடுத்து, சினிபு எஸ்.ரவிக்கு, நிதி உதவி அளிக்க ஏராளமானவர்கள் முன்வந்துள்ளனர். "பத்திரிகையில் வந்த செய்தியை பார்த்து, ஏராளமானவர்கள் எங்களை தொடர்பு கொண்டு பேசினர். தங்களால் முடிந்த அளவு நிதி உதவி அளிப்பதாகக் கூறினர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஓரம் கட்டப்படும் சில வகையான விளையாட்டுகளுக்கு இது ஊக்கம் அளிப்பதாக அமையும்' என்றார், சினிபு எஸ்.ரவியின் பயிற்சியாளர் முகுந்த குமார்.
Monday, October 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
vilayattukalai valarapathil nammavarkalukku arvam thuliyum kidayathu .intha natum nattu makkalum nasamai pokattum
Post a Comment