
புதுடில்லி : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 2003 ம் ஆண்டுக்குப்பின் இன்று காலை வர்த்தகத்தில் அதிகமாக குறைந்திருக்கிறது. ஆசிய சந்தை கடும் சரிவில் இருப்பதால், இந்திய சந்தையில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று காலை 47.30/32 ஆக குறைந்திருந்தது. இது வெள்ளி அன்று முடிந்த போது ரூ.47.0750/0850 ஆகத்தான் இருந்தது. இன்று காலை வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூபாயின் மதிப்பு.47.45 வரை கூட குறைந்திருந்தது. இது கடந்த 2003 ஏப்ரலுக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு அதிகமாக குறைந்திருக்கிறது.
No comments:
Post a Comment