
துபாய் : துபாயில் 160 மாடிகளைத் தாண்டி, 780 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள, "பர்ஜ் துபாய்' கட்டடம், உலகிலேயே மிக உயர்ந்த கட்டடம் என்ற அந்தஸ்தை பெறுகிறது. இதுகுறித்து ஐக்கிய அரபு குடியரசின் எமார் பிராபர்டீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அகமது அல் மட்ரூஷி கூறியதாவது: இதுவரை உலகிலேயே மிக உயர்ந்த கட்டடமாக, அமெரிக்காவின் வடக்கு தகோட்டாவில் உள்ள, 628.8 மீட்டர் உயரம் கொண்ட "கே.வி.எல்.ஒய்.,-டிவி' கட்டடம் உள்ளது. அந்தக் கட்டடத்தை தற்போது மிஞ்சியுள்ளது துபாயில் கட்டப்பட்டு வரும், "பர்ஜ் துபாய்' கட்டடம். தற்போது 160 மாடிகளைத் தாண்டி, 780 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. பிரமாண்டமான உயரம் கொண்ட இந்த "பர்ஜ் துபாய்' 2009ம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு திறக்கப்பட்ட தைவான் நாட்டில் உள்ள, 101 மாடிகளையும், 508 மீட்டர் உயரத்தையும் கொண்ட தைபே கட்டடத்தையும் இது மிஞ்சியுள்ளது. "பர்ஜ் துபாய்' கட்டடத்தில் குடியிருப்புகள் மட்டுமின்றி, வர்த்தக வளாகங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் போன்றவையும் இடம் பெற உள்ளன. இவ்வாறு அகமது அல் மட்ரூஷி கூறினார்.
No comments:
Post a Comment