வாஷிங்டன் : பொது இடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், அமெரிக்க நகரில் மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது! அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் உள்ள பியூபியோ நகராட்சி, பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை விதித்து 2003ல் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து, பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களை போலீஸ் பிடித்து அபராதம் விதித்தும் வந்தது. ஆனால், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது படிப்படியாக குறைந்து விட்டது. இதன் விளைவு, கடந்த மூன்றாண்டுகளில் தெரியவந்துள்ளது.
ஆண்டுக்கு 500 பேருக்கு மேல் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்த நகரில், கடந்த மூன்றாண்டாக மாரடைப்பு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. கடந்த 2006ல், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 390 ஆக குறைந்தது; கடந்தாண்டு 230 ஆக குறைந்துள்ளது. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில், மொத்தத்தில் மாரடைப்பு பாதிப்பு 40 சதவீதம் குறைந்து விட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு சிகிச்சை மைய தலைவர் டாக்டர் ஜானெட் காலின்ஸ் கூறுகையில்,"பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதால் , அதை பிடிப்பவர்களுடன், சிகரெட் பிடிக்காத மற்றவர்களுக்கும் ரத்த அழுத்தம் உட்பட பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இது போன்ற பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் அதிகமாக இருந்தனர். பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, சிகரெட் பிடிக்காத மற்றவர்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது' என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment