பெங்களூரு: இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதலனை, முன்னாள் காதலி பழிவாங்கிய சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரு கோரமங்களா எட்டாவது பிளாக்கில் பல் மருத்துவமனை நடத்துபவர் பெண் டாக்டர் அமீனா. அவரது நண்பர் மீர் ஹர்ஸத் அலி, மைசூரில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். அமீனாவும், அலியும் கல்லூரியில் படிக்கும் போது காதலிக்கத் துவங்கினர். எட்டு ஆண்டுகள் அவர்களது காதல் நீடித்தது.
சமீப காலமாக, அவர்களுக்குள் நல்லுறவு இல்லை. அதனால் டாக்டர் அலி, வேறொரு பெண்ணை ஒரு மாதம் முன் திருமணம் செய்து கொண்டார். புது மனைவியுடன் சந்தோஷமாக தன் இல்லற வாழ்க்கையைத் துவக்கினார். அதையறிந்த அமீனா, கொதிப்படைந்தார். "எனக்குக் கிடைக்காதவர், இன்னொவருக்குக் கிடைக்கக் கூடாது' என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான விபரீத செயலில் இறங்கினார். மைசூரிலிருந்த அலிக்குப் போன் செய்து பெங்களூரு வரும்படி அழைப்பு விடுத்தார். முன்னாள் காதலியின் அழைப்பை ஏற்ற அலியும் நவ., 29ம் தேதி பெங்களூரு வந்தார். அமீனாவின் பல் மருத்துவமனைக்குச் சென்றார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மயக்க மருந்து கலந்த பழ ஜூசை அமீனா கொடுத்தார். அதை அறியாத அலி குடித்ததும், மயங்கி விழுந்தார். "நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக' எண்ணிய பெண் டாக்டர் அமீனா, கூர்மையான கத்தியால் அலியின் மர்ம உறுப்பை "நறுக்' என்று "கட்' செய்து வீசி விட்டார். அலியின் உடலில் ரத்தம் பெருக்கெடுத்தது. அதன்பிறகு தான் அமீனாவுக்குப் பயம் ஏற்பட்டது. அலியை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த அவர், தலைமறைவாகி விட்டார். அப்பல்லோ டாக்டர்கள், அலிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். "உறுப்பு போய் விட்டாலும் உயிருக்கு ஆபத்தில்லை' என்று, சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறுகின்றனர். சம்பவம் பற்றி வழக்கு பதிந்துள்ள போலீசார், "பழிக்குப்பழி' வாங்கிய பெண் டாக்டர் அமீனாவை தேடி வருகின்றனர்.
Tuesday, December 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment