Tuesday, December 30, 2008

தக்காளியை அப்படியே!


தக்காளியை சாம்பாரில், ரசத்தில், பச்சடியில் சேர்ப்பீர்கள். ஆனால், அப்படியே சாப்பிட்டதுண்டா, எப்போதாவது சாப் பிட்டிருப்பீர்கள். சரி, பச்சடி போல, சாலட் போன்றவற்றிலும் பச்சையாக சேர்த்தால், அதனால், கலோரி குறையும் என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பச்சையாக தக்காளி சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் தவறான கருத்து பலரிடம் உள்ளது. அதெல்லாம் சரியல்ல. சாண்ட்விச்சாக கூட செய்து சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரி சுவீட் ஆச்சே
ஸ்ட்ராபெர்ரி பழங்கள், இனிப்பானது என்பது தெரிந்தது தானே. ஆனால், அதுவும், கலோரி அதிகம் எரிக்கும் பழங்களில் முக்கியமானது. காலை சிற்றுண்டியில் சேர்த்துக் கொள்ளலாம். காலையிலேயே கலோரி எரிப்பதற்கு இது உதவும். பகல், மாலை வேளையிலும் இதை சாப்பிடலாம்.
ஆரஞ்சை உரித்து...
ஆரஞ்சு பழத்தை உரித்து சாப்பிடுங்க; அதில் உள்ள சத்துக்கள் கிடைப்பதுடன், அதிக கலோரி குறைகிறது. ஆரஞ்சு பழத்தில் 45 கலோரி உள்ளது; அதை ஜீரணிக்க உடலில் உள்ளவற்றில் 60 கலோரி இழக்கப்படுகிறது.
பகலும், இரவும் இதை தாராளமாக சாப்பிடலாம். எந்த பாதிப்பும் வரும் என்ற அனாவசிய சந்தேகம் தேவையில்லை.
சிப்சுக்கு பதில் கேரட் ஓகே!
நெல்லிக்காய், இஞ்சி போன்றவற்றை சிறிய பாக்கெட்களில் அடைத்து மிட்டாய் போல விற்பனை செய்யப்படுவதை பார்த்திருப்பீர் கள். பார்த்துக்கொண்டே இருங்க, ஒரு நாள் பச்சையாக கேரட்டை கூட பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்யப்போகின்றனர். ஆம், சிப்ஸ் போன்ற மொறுமொறுக்களை விட, கேரட்டில் உள்ள சத்துக்களுக்கு குறைவே இல்லை. அப்படியே கடித்தும் சாப்பிடலாம்; ஜூசாக்கியும் குடிக்கலாம்; உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆப்பிள் இதிலும் டாப்!
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க; உடல் ஆரோக்கியத்துக்கு குறைச்சலே இருக்காது என்று டாக்டர்கள் கூறுவதை பெரும்பாலோர் கேட்பதில்லை. விழா நாட்களில் மட்டும், ஆப்பிளை வாங்கி தட்டில் வைத்து விருந்தினர்களுக்கு தருவதோடு சரி; அதை சாப்பிடுவதில் மட்டும் அக்கறை காட்ட மாட்டார்கள். ஆப்பிளில் 60 முதல் 80 கலோரி வரை உள்ளது. ஆனால், அதை கடித்து சாப்பிடும் போது, அதை விட, மிக அதிக கலோரி எரிக்கப் படுகிறது. மற்ற மொறுமொறுக்களை குறைத்து ஆப்பிள் துண்டுகளை விழுங்குங்களேன்.
தர்பூசணி
தர்பூசணி சாப்பிடுவதால் பல சத்துக்கள் கிடைக்கின்றன; முக்கியமாக, உடலுக்கு எனர்ஜி கிடைக்கிறது. இதை அப்படியே சாப்பிடலாம்; ஜூசாகவும் குடிக்கலாம்.

No comments: