Tuesday, December 30, 2008

எட்டு குழந்தைகள்



எட்டு குழந்தைகள் இருக்கின்றனர், 46 வயது வில்சன் - 44 வயது லில்லி தம்பதியினருக்கு. தன் 19வது வயதில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது, "நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்!' என்று வில்சனை எச்சரித்தனர் டாக்டர்கள். ஆனால், 27 வயதான போது, வில்சனுக்கு திருமண ஆசை வந்து விட்டது. லில்லியை மணந்த வில்சன் கு.க., பற்றி கவலைப்படவில்லை.
எட்டாவது குழந்தை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற போது, "உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா?' என்று கேட்டனர் டாக்டர்கள். அதற்கு, "கடவுள் தந்தால், வேண்டாம் என்று சொல்ல முடியுமா?' என்றார் லில்லி. திருச்சூர், முண்டூர் கிராமத்தில் எட்டு குழந்தைகளுடன் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர் இந்த தம்பதியினர். இவர்களை பார்ப்பவர்கள், "அடுத்தது எப்போ?' என்று கிண்டலாக கேட்கின்றனர்

No comments: