Wednesday, January 14, 2009

சிகரெட் பழக்கத்தை கைவிடுவதில் கடினம் ஏன்


வாஷிங்டன்:புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட உறுதி பூண்டவர்களில் பெரும்பாலா னோர், மீண்டும் அப்பழக்கத்துக்கு திரும்பி விடுகின்றனர். புகை பிடிப்பவர்களையும், புகை பிடிப்பது போன்ற படங்களையும் பார்க்கும் போது, அவர்களது மூளையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணமென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த டியூக் பல்கலை மருத்துவ மையத்தின் மனநிலை மற்றும் செயல்பாடுகள் அறிவியல் பிரிவு இணை பேராசிரியர் மெக்கிளர்னான் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு, அதற்கு அடிமையான பலரும் சபதம் எடுக்கின்றனர். ஆனால், அவர்களால், 24 மணி நேரத்துக்கு மேல், அப்பழக்கத்தை நிறுத்த முடிவதில்லை. மீண்டும் அப்பழக்கத்துக்கு திரும்பி விடுகின்றனர்.புகை பிடிப்பது போன்ற படங்களைப் பார்க்கும் போதும், புகை பிடிப்பவர்களை பார்க்கும் போதும், அவர்களிடம் இருந்து வெளிவரும் புகையை சுவாசிக்கும் போதும், அவர்களது மூளையில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகள் மீண்டும் தூண்டப்பட்டு, புகை பழக்கத்துக்கு திரும்பச் செய்து விடுகின்றன.
புகை பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக கைவிடுவதற்கு உறுதி எடுப்பவர்களில் 5 சதவீதத்தினரால் மட்டுமே முழுமையாக வெற்றியடைய முடிகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகை பழக்கத்தைக் கைவிடும் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும், மூளையின் செயல்பாடுகளை ஆராய்வதற்கும் அடுத்த கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.

No comments: