
வாஷிங்டன்: "தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கிங்' மூலம், குட்டீஸ்களுக்கு தான் ஆபத்து உள்ளது' என்று அமெரிக்க நிபுணர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.சிகரெட் பிடிப்பவர் என்பவர் "பர்ஸ்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்' எனப்படுகிறார். அதாவது,நேரடியாக சிகரெட் பிடிப்பதன் மூலம் பாதிக்கப்படுகிறார். இவர் விடும் புகையை சுவாசிப்பவர் தான் "செகண்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்' என்று அழைக்கப்படுகிறார். சிகரெட் பிடிப்பவருக்கு கேன்சர் வருவதை விட, இந்த இரண்டாம் கை மாறும் புகைப்பவருக்கு அதிக பாதிப்பு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி யாளர் ஜொனாதன் விங்காப் "தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கர்' என்ற புதிதாக பாதிக்கப்படு வோரை கண்டறிந்துள்ளார். ஒருவர் பிடிக்கும் சிகரெட், அடுத்தவர் சுவாசத்தில் சேர வாய்ப்புள்ளது. அதையும் தாண்டி வேறு இடங்களிலும் பரவுகிறது. அதாவது, சிகரெட் பிடிப்பவரின் தலைமுடி, அவர் சிகரெட் பிடிக்கும் இடத்தில் உள்ள சோபா செட், தரை விரிப்பு போன்றவற்றில் படிகிறது. இப்படி படியும் சிகரெட் துகள் ரசாயனம் , பெரியவர் களை விட, குழந்தைகளுக்கு தான் எளிதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி பாதிப்பை அனுபவிக்கும் குழந்தைகள் தான் "தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கர்'கள் என்று அமெரிக்க நிபுணர் பிரித்துள்ளார்.
சிகரெட் பிடிக்கும் போது பரவும் புகையால் தரை விரிப்பு, சோபா செட் போன்ற இடங் களில் படியும் ரசாயனங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. ரசாயன குண்டுகளில் பயன் படுத்தப்படும் சயனைடு, "புடேன்' என்ற திரவ எரி ரசாயனம், ஈயம், கார்பன் மோனாக்சைடு, போலோனியம் ஆகியவை உள்ளன. இந்த ரசாயன கலவைகளால் குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிபுணர் லிங்காப் கூறுகையில்,"இதுவரை "செகண்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்' பற்றி தான் அறிந்திருந்தோம். இப்போது மூன்றாம் கை மாறும் சிகரெட் பாதிப்பு பற்றி கண்டுபிடித் துள்ளோம். இதை தடுக்க புதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment