
அம்பத்தூரில் ஸ்ரீவாரி கேப்பிட்டல்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் நாகராஜன். இவர் தனது நண்பர் சுசீந்திரனுடன் சேர்ந்து பொதுமக்களின் முதலீடுகளை கவர புதிய அறிவிப்புகளை இண்டர்நெட் மூலம் விளம்பரமாக வெளியிட்டார்.
அதில் ரூ. 1 லட்சம் கட்டினால் மாதம் ரூ. 10 ஆயிரம் வீதம் 24 மாதத்திற்கு வழங்கப்படும் என்றும் மற்றொரு திட்டத்தில் ரூ. 1 லட்சம் கட்டினால் மாதம் ரூ. 20 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர்களின் பணத்தை பணவர்த்தகத்தில் முதலீடு செய்வோம் என்றும் தெரிவித்தனர்.
இதை உண்மை என நம்பி ஏராளமானோர் ஸ்ரீவாரி கேப்பிடல் நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்தனர். இதே போல் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பீர்சிங் என்பவரும் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தார். 1 மாதம் மட்டும் ரூ. 10 ஆயிரம் கொடுத்தனர். பின்னர் பணம் கொடுக்கவில்லை. கேட்டபோது சரியான பதில் இல்லை.
அம்பத்தூரில் உள்ள நிதி நிறுவனத்திற்கு வந்து ஜக்பீர்சிங் பார்த்தார். நிறுவனம் பூட்டி கிடந்தது. தன்னை போலவே நிறைய பேர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார்.அவரது உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் நவ நீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார் தலைமறைவான நாகராஜனை கைது செய்தனர். பங்குதாரர் சுசீந்திரனை தேடிவருகின்றனர்.
பணத்து ஆசை யாரை விட்டது,படிப்புக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்து இருக்காலாம்.தாயு செய்து போலிகளை பார்த்து ஏமார்ராதிர்,படித்த மக்களுக்கே இந்த புத்தி என்றால்,பாமர மக்களுக்கு யார் பாதுக்காப்பு.ஆண்டவா மக்களை ஆடம்பரத்தை விட்டு விலக்குவாயாக."ஏமர்பவன் இருக்கும் வரை,ஏமாற்றுபவன் இருக்கச்செயிவான்".
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment