Tuesday, October 20, 2009

நீண்ட ஆயுள் பெறுவதற்காக “எமன்” வழிபாட்டுக்கு சென்ற 8 பேர் விபத்தில் பலி


ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம் தர்மபுரியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மன் கோவில். இக்கோவிலில் பிரமாண்டமான எமதர்மன் சிலை உள்ளது.

தெலுங்கு கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் எமதர்மன் பூமிக்கு இறங்கி வருவதாகவும், அன்றைய நாளில் அவரை வழிபட்டால் ஆயுள் நீட்டிப்பு தருவார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். நேற்று தெலுங்கு கார்த்திகை மாதம் தொடங்கியது.

இதையொட்டி இக்கோவிலுக்கு மராட்டிய மாநிலம் மஞ்சாரம் கிராமத்தைச் சேர்ந்த பிரகலாதராவ் (வயது 78), லட்சுமண் ராவ் (52) உள்பட 8 பேர் ஆயுள் நீட்டிப்பு வழிபாடு நடத்த காரில் புறப்பட்டனர்.

அவர்கள் நேற்று ஜெகத்தியாலா அருகே வந்தபோது எதிரே வந்த சிமெண்ட் லாரி மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த 8 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

ஆயுளை நீட்டிப்பதற்காக எமனை வழிபட வந்தவர்கள் விபத்தில் பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments: