Monday, October 19, 2009

தீபாவளி கொண்டாட்டம்: 1000 டன் பட்டாசு குப்பை குவிந்தது; மாநகராட்சி லாரிகளில் அகற்றம்



சென்னை, அக். 19-
சென்னையில் தினமும் சுமார் 3 ஆயிரத்து 500 டன் குப்பை குவிகிறது. மண்டல வாரியாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தினசரி குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. 3, 6, 8, 10 ஆகிய 4 மண்டலங்களில் மட்டும் தனியார் நிறுவனம் மூலம் குப்பை அள்ளப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை வாசிகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் 1012 டன் பட்டாசு குப்பை குவிந்தது.

தீபாவளி முடிந்ததும் உடனடியாக பட்டாசு குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஏற்பாடு செய்தது. அதன்படி 8 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை முதல் இரவு வரை 2 ஷிப்டு களாக குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

சவுகார்பேட்டை, திரு வல்லிக்கேணி, அண்ணாநகர், அடையார், பெரம்பூர், எழும்பூர், ஆழ்வார்பேட்டை, சேப்பாக்கம், ஷெனாய்நகர், எம்.எம்.டி.ஏ. காலனி, ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், தி.நகர், அயனாவரம், தண்டையார்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம், வடபழனி, பெசன்ட்நகர், வண்ணாரப்பேட்டை, கே.கே. நகர், உள்பட முக்கியமான இடங்களில் பிரதான மான சாலைகள் ஆகியவற்றிலும் குப்பைகளை அள்ளி மாநகராட்சி குப்பை கிடங்குகளில் சேர்க்கப்பட்டது.

6 மண்டலங்களில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் 547 டன் குப்பைகளும் தனியார் நிறுவனம் மூலம் 4 மண்டலங்களில் 465 டன் பட்டாசு குப்பைகளும் அகற்றப்பட்டன.
1 1

Source: http://www.maalaimalar.com

No comments: