Monday, October 19, 2009

இலங்கையில் தமிழர்களை கொல்லும் காட்சி வீடியோ உண்மையானது; அமெரிக்க ஆய்வகம் தகவல்



நியூயார்க், அக். 19-

இலங்கையில் தமிழர்களை நிர்வாணமாக்கி சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்வது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமீபத்தில் வெளியானது. இது உண்மையான வீடியோ காட்சி அல்ல என்று இலங்கை அரசு மறுத்து வந்தது.
அமெரிக்காவில் உள்ள இன அழிப்புக்கு எதிரான அமைப்பினர் இந்த வீடியோ உண்மையானது தானா? என்று ஆராய வல்லுனர்கள் குழுவை அமைத்தனர்.

அவர்கள் அங்குள்ள ஆய்வகம் மூலம் இவற்றை ஆய்வு செய்தனர். இதன் முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் முதல் கட்ட அறிக்கையின்படி இந்த வீடியோ உண்மையானது என்று தெரிகிறது. வீடியோ காட்சிகள் தொடர்ந்து வருகின்றன. வீடியோவை நிறுத்தி காட்சிகளை சேர்த்ததற்கான ஆதாரமோ அல்லது காட்சிகளை நீக்கியதற்கான ஆதாரமோ எதுவும் இல்லை. ஆரம்ப கட்ட ஆய்வில் 10-க்கும் மேற்பட்ட விஷயங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

முதலில் இறந்தவரின் ரத்தமும், அடுத்து இறப்பவரின் ரத்தமும் நிறத்தில் மாறுபாடு தெரியும். இந்த வீடியோவிலும் அந்த மாறுபாடு தெரிகிறது. காயமாக இருந்தால் அந்த மாறுபாடு தெரியாது.

துப்பாக்கி சுடும்போது ஏற்படும் சத்தம், அலறல் சத்தம் ஆகியவை வெளிவருவதிலும் உரிய கால இடைவெளி தெரிகிறது.

முதலில் சுடப்பட்டவரின் கால் அசைவு அவர் இறக்காமல் துடிப்பதை உறுதி ஏற்படுத்துகிறது.

எனவே இந்த வீடியோ உண்மையானதுதான். ஆனாலும் இன்றும் ஆய்வு நடத்த வேண்டியது உள்ளது. நவம்பர் மாதம் இறுதியில் முழு அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Source: http://www.maalaimalar.com

No comments: