Wednesday, October 14, 2009

தேர்தல் முடிவை துல்லியமாக சொன்னால் ரூ.21 லட்சம் பரிசு; ஜோதிடர்களுக்கு அழைப்பு



மும்பை, அக். 14-

மும்பையில் மூட நம்பிக்கை ஒழிப்பு கமிட்டி எனும் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு தேர்தலை முன்னிட்டு ஒரு சவாலை அறிவித்துள்ளது. மராட்டிய தேர்தல் முடிவை சரியாக கணித்து சொல்லும் ஜோதிடருக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

80 சதவீதம் சரியாக சொன்னால் கூட போதும், பரிசு தர தயாராக உள்ளோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிடம் என்பது வெறும் மூட நம்பிக்கை என்பதை உலகுக்கு காட்டவே இந்த போட்டியை நடத்துவதாக அந்த அமைப்பு கூறி உள்ளது.

No comments: