Wednesday, October 14, 2009

இந்திய கோர்ட்டு மீது நம்பிக்கை இல்லை: தீவிரவாதி அஜ்மல் மனு



புதுடெல்லி, அக்.13-

மும்பை தாக்குதல் தொடர்பாக கைதான தீவிரவாதி யான அஜ்மல் மீது வழக்கு தொடரப்பட்டு மும்பை கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தசிலியானிக்கு, அஜ்மல் ஒரு மனு எழுதி இருந்தார். உருது மொழியில் தனது கைப்பட எழுதி இந்த மனுவை ஜெயில் அதிகாரிகளிடம் கொடுத்தார். அதை ஜெயில் அதிகாரிகள் மராத்தியில் மொழி பெயர்த்து கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில், இந்திய கோர்ட்டு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே எனது வழக்கை சர்வதேச கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தான்.

நீதிபதி தசிலியானி இந்த மனுவை தள்ளுபடி செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது, அஜ்மல் குறும்புத்தனமாக இந்த மனுவை அனுப்பி இருக்கிறார். வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று. இதை ஏற்க முடியாது என்றார்.
அஜ்மலுக்குரிய சரியான நீதிமன்றம் அரபிக்நாட்டில்தான் உள்ளது. or பாகிஸ்தான் நீதிமன்றம் எனில், இந்நேரம் வெளியில் விட்டு, ஏதாவது பரிசுடன், அரச தொழிலோ, முக்கிய பொறுப்போ கொடுத்திருப்பார்கள், இந்தியா உண்மையில் அதனை செய்யாதது அஜ்மலுடன், இந்தியாவில் வாழும், இந்திய எதிரிகளோடு, பாகிஸ்தானுக்கும் பிடிக்கவில்லை. நடு வீதியில் சுட்டு கொன்றிருந்தால், இந்தியாவை அசிங்கப்படுத்தும் அனைவரும் திருந்தியிருப்பர் ! இந்தியாவை அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து ,இனிவரும் காலங்களில், கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ! உலகிலும், இந்தியாவிலும், இந்தியனாக வாழும் பாசமிகு இந்தியனை வாழ்த்துகிறேன் ! அன்பேசிவம் ! நன்றி, தமிழன்.

1 comment:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

உன்னைப்போல் ஒருவன் கமல், வெட்நஸ்டே ஷா! நீங்கள் இருவரும் சொன்னது முற்றிலும் உண்மை! இப்ப பாருங்க எனவெல்லாம் கேட்கிறான்?