
லண்டன், அக். 19-
பாப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் திடீர் மரணத்தால் அவருடைய புகழ் அதிகரித்து உள்ளது. அவர் பயன்படுத்திய பொருட்களை அவருடைய நினைவாக வைத்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதனால் அவர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட்டு அதிக விலைக்கு விற்று வருகின்றனர். மைக்கேல் ஜாக்சன் 1984-ம் ஆண்டு “வெற்றி பயணம்” என்ற பெயரில் உலக சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தினார்.
அப்போது வித்தியாசமான கையுறை அணிந்து நடனம் ஆடினார். இந்த கையுறையில் 50 கியூ விளக்குகள் பொருத்தப்பட்டு “எம்பி ராய்டரி” மூலம் தைக்கப்பட்டு இருந்தன.
இது லண்டன் ஏல நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது. இதை ரூ.30 லட்சத்துக்கு ஒருவர் ஏலம் ஏடுத்து உள்ளார். மைக்கேல் ஜாக்சனின் மஞ்சள் கலர் சட்டை ஒன்று ஏற்கனவே ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment