Thursday, October 29, 2009

30 ஆண்டுக்கு முன் இறந்த பெண் உடல் அடக்கம்


சவுதிஅரேபியாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 1979-ம் ஆண்டு நர்சாக பணியாற்றி வந்தவர் ஹெலன் ஸ்மித். இவர் கட்டிடம் ஒன்றில் தவறி விழுந்து உயிர் இழந்தார். அப்போது அவரது வயது 23. ஆனால் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை ரான்ஸ்மித் புகார் செய்தார்.

ஹெலன்ஸ்மித் டென்மார்க் கப்பல் கேப்டன் ஒருவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் அப்போது அவர் கற்பழித்து கொல்லப்பட்டதாகவும் புகார் கூறினார். எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என வற்புறுத்தி வந்தார்.

இதனால் ஹெலன் உடல் அடக்கம் செய்யப்படாமலே 30 ஆண்டுகளாக சவுதி அரேபியா ஆஸ்பத்திரி பிண அறையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

அவரது உடலை அக்கம் செய்யும்படி தந்தையிடம் சொன்னதற்கு அதை ஏற்க மறுத்து விட்டார்.

இப்போது தந்தை ரான் ஸ்மித்துக்கு 83 வயதாகி விட்டது. உடல் நலமும் குன்றி விட்டது. இதையடுத்து அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு மகள் உடலை பெற்று அடக்கம் செய்ய முன் வந்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

No comments: