Thursday, October 29, 2009

மரபு அணுவின் தாக்கத்தால் பேத்திகளை அதிகம் நேசிக்கும் பாட்டிகள்: ஆராய்ச்சியில் தகவல்


பொதுவாக பாட்டிக்கு தஙகளது பேரன்களை விட பேத்திகளைத்தான் அதிகம் பிடிக்கும். இதற்கு அறிவியல் காரணங்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஒரு ஆய்வு நடத்தினார்கள். ஒரு பெண்ணுக்கு மகன் மூலம் பேரன், பேத்திகள் பிறக்கும்போது அந்த பெண்ணின் குரோமசோம்களின் ஒரு பகுதி பேரன் பேத்திக்கு செல்கிறது.

அதாவது பெண்ணுடைய ஒய் குரோமசோமில் 31 சதவிதம் பேத்திக்கும், 23 சதவீதம் பேரனுக்கும் செல்கிறது.

பேரனுக்கு செல்லும் குரோமசோமின் அளவை விட பேத்திக்கு செல்லும் குரோமசோம் அளவு அதிகமாக இருக்கிறது.

எனவேதான் பேரனை விட பேத்தி மீது பாட்டிக்கு பாசம் அதிகமாக உள்ளது. இந்த குரோமசோமால் பேத்தி உடலில் இருந்து வரும் ஒருவித வாசனை பாட்டியை ஒத்து இருக்கிறது. அதே போல் பேத்திகளின் உடல் ரீதியான நடவடிக்கைகளும் பாட்டியை ஒத்து இருக்கிறது. இதனால் பேத்தி மீது பாட்டிக்கு தன்னை அறியாமலேயே ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அதே போல பேத்திக்கும் பாட்டி மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.

அதே நேரத்தில் மகள் மூலம் பிறக்கும் பேரன்- பேத்திகளுக்கு பாட்டியிடம் இருந்து தலா 25 சதவீத குரோமசோம் செல்கிறது. எனவே மகள் வயிற்று பேரன்- பேத்திகள் மீது பாட்டிக்கு சம அளவில் மட்டுமே பாசம் இருக்கும்.
ரத்த உறவுகளில் ஒருவர் மீது ஒருவர் காட்டும்பாசத்துக்கும் மரபு அணுவே காரணம் என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments: