
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே, கடலில் மீனவர் வலையில் நான்கு டன் எடையுள்ள திமிங்கலம் சிக்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி மீனவர்கள் சுந்தரமூரத்தி, ராமச்சந்திரன் ஆகியோர், நேற்று முன்தினம், கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடலில் 2 கி. மீ., தூரத்தில், இரட்டை மடி வலை விரித்ததில், நான்கு டன் எடையுள்ள ராட்சத திமிங்கலம் சிக்கியது. கடலில் இருந்து இழுத்து வந்து, ஜே.சி.பி., உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தபோது 15 மீட்டர் நீளத்திலும் 2 மீட்டர் அகலத்திலும் இருந்தது. ???வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். "வேல் ஷார்க்' என்ற அபூர்வ வகையை சேர்ந்தது என, அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர்கள் "கோமராசு' வகையை சேர்ந்தது என்கின்றனர். இறந்த திமிங்கலத்தை, கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்து, கடற்கரையில் புதைத்தனர்.
source: www.dinamalar.com
No comments:
Post a Comment