Thursday, October 22, 2009

இலங்கை அகதி முகாமில் இருந்து 41 ஆயிரம் தமிழர்கள் இன்று விடுவிப்பு; சொந்த ஊர் சென்றனர்


நம்பும் படி இல்லை
நல்லது நடந்தால் மகிழ்ச்சி


இலங்கையில் போர் பகுதியில் இருந்து வெளியேறிய தமிழர்கள் 3 லட்சம் பேர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. அவர்கள் முகாமை சுற்றி பார்த்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசி அவர்கள் முகாமில் இருக்கும் அனைத்து தமிழர்களையும் விரைவில் விடுவித்து சொந்த ஊரில் குடியமர்த்தும்படி வற்புறுத்தினார்கள்.



அதற்கு ராஜபக்சே 2 வாரத்தில் 58 ஆயிரம் பேரை சொந்த ஊரில் குடியமர்த்துவோம் என்று உறுதி அளித்தார்.



அதன்படி இன்று 12 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 41 ஆயிரத்து 685 பேரை முகாமில் இருந்து விடுவித்தனர். அவர்களை பஸ் மற்றும் வாகனங்களில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.



ஒவ்வொருவருக்கும் ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ. 20 ஆயிரம் பாங்கி சேமிப்பு, 6 மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்கள், படுக்கை விரிப்புகள், அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.



இன்று விடுவிக்கப்பட்ட 41 ஆயிரத்து 685 பேரில் 8643 பேர் வவுனியா மாவட்டத்தையும், 6631 பேர் மன்னார் மாவட்டத்தையும், 16 ஆயிரத்து 394 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தையும், 10 ஆயிரத்து 17 பேர் கிளிநொச்சி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
 
Source: http://www.maalaimalar.com

No comments: