Friday, October 23, 2009

இலங்கையில் போர் குற்றம் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா வற்புறுத்தல்



இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த உச்சகட்ட போரின் போது வடக்கு பகுதியில் தமிழர்கள் மீது அடக்கு முறையும், போர்க்குற்றங்களும் நடந்ததாக உலக நாடுகள் புகார் கூறி வருகின்றன.

அப்போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் போர் நடந்த வட கிழக்கு பகுதியில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து உலக நாடுகளின் அமைப்புகள் விசாரணை நடத்த இலங்கை அனுமதிக்க வேண்டும் எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லான் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையின் வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது ராணுவத்தினர் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளின் நிறுவனங்கள் விசாரணை நடத்த அந்நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அங்கு நடந்த உண்மையான விவரங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இறுதி கட்ட போரின் போது இலங்கையில் அகில உலக மனித உரிமை சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அது உண்மை என்றால் மிகப் பெரிய குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு இலங்கை அரசு அனுமதிக்குமா???????????????? விசாரணை நடைபெறுமா?????????????? எல்லாவற்றிற்கும் எப்போது விடியல் ஒன்று மட்டும் உண்மை..... விடியல் வெகு தொலைவில் இல்லை என்று நம்புவோம்...

Source: http://www.maalaimalar.com

No comments: