
புதுடெல்லி, அக். 14-
சர்வதேச பொருளாதார பத்திரிகையான போபர்ஸ் உலகில் எந்த நாட்டில் அதிக பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது. ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் இதில் இடம் பெற்று உள்ளனர். வழக்கம் போல அமெரிக்கா இதில் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 359 பேர் 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
2-வது இடத்தில் சீனா உள்ளது. அங்கு 130 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 101 பேர் இருந்தனர். ஒரே ஆண்டில் 29 பேர் இந்த பட்டியலுக்குள் நுழைந்து உள்ளனர். சீனா இதே வேகத்தில் முன்னேறினால் விரைவில் அமெரிக்காவை முந்தும் வாய்ப்பு உள்ளது.
அங்கு கம்யூனிஸ்டு ஆட்சி இருந்தாலும் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கி உள்ளது. இதனால் ஏராளமானோர் கோடி, கோடியாக சொத்துக்களை குவித்து வருகின்றனர்.
அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் ரஷியா 3-வது இடத்தை பிடித்து உள்ளது. அங்கு 32 பேர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
இந்தியாவிலும் பணக்காரர்கள் அதிகரித்து வருகிறார்கள். இங்கு 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் பட்டியலில் 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment