Wednesday, October 14, 2009

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் 54 போர் விமானங்கள்; தயாரிக்கும் பணி தொடங்கியது



வாஷிங்டன், அக். 14-

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 54 போர் விமானங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்காக முதல் கட்டமாக 18 விமானங்கள் தயாரிக்கப்படுகிறது. அதற்கான தயாரிப்பு பணி இன்று தொடங்கியது.

இதற்கான விழா வாஷிங்டனில் நடந்தது. இந்த விழாவில் பாகிஸ்தான் விமானப்படையின் தலைமை அதிகாரி மார்ஷல் ராவ் உமர் சுலைமான், அமெரிக் காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஜப்பானி ஆகியோர் தெரிவித்தனர்.

18 போர் விமானங்களையும் அடுத்த ஆண்டு (2010) டிசம்பர் மாதத்துக்குள் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source: http://www.maalaimalar.com

No comments: