Monday, October 12, 2009

67-வது பிறந்த நாள்: “80 வயது வரை நடிப்பேன்” அமிதாப்பச்சன் பேட்டி


நடிகர் அமிதாப்பச்சன் நாளை தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த வயதிலும் அவர் பிசியான நடிகராக இருக்கிறார். அவர் நடித்த 3 படங்கள் ரிலீசாக காத்திருக்கிறது. டெலிவிஷன் நிகழ்ச்சி, விளம்பர நிகழ்ச்சி, பேஷன் ஷோ போன்றவற்றிலும் பங்கேற்று வருகிறார். அவர் சினிமா உலகுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. பிறந்தநாளை ஒட்டி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர்கள் வயதாகிவிட்டால் முக்கிய பாத்திரங்களில் நடிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அசோக்குமார் 80 வயதிலும் சிறப்பாக நடித்து கொண்டிருக்கிறார். அவரை பின்பற்றி நானும் 80 வயது வரை நடிப்பேன்.

ஆனால் இந்த வயதில் காதல் செய்யும் இளைஞராக நடிக்க முடியாது எனது 67 வயதுக்கு எந்த பாத்திரம் பொருத்தமாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து நடிப்பேன்.

எனது நண்பர் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் உடல் நலம் இல்லாமல் இருந்ததால் அவரை கவனித்து கொள்வதற்காக 3 மாதம் சிங்கப்பூரில் இருந்தேன். இன்னும் சில காலம் எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. வருகிற ஜூன் மாதத்துக்குள் என்னிடம் இருக்கும் அனைத்து படங்களையும் முடித்து கொடுத்து விடுவேன்.

மீண்டும் டெலிவிஷன் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது.

No comments: