விழுப்புரம், அக்.12-
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படித்த மாணவி திவ்யா கடந்த 6-ந் தேதி இரவு மாணவர்களின் ஈவ்டீசிங் கொடுமையால் தன் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் இரவு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இறந்து விட்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் தமிழக உயர்கல்வி, சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் பழனிசாமி ஆகியோர் விழுப்புரம் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள மாணவி திவ்யாவின் வீட்டிற்கு சென்று திவ்யாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த மாணவி திவ்யாவின் மரணம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில்தான் ஈவ்டீசிங் பிரச்சினையால் இது போன்ற செயல்கள் நடந்து வந்தன.
தற்போது முதன்முதலாக கலைக்கல்லூரியில் இந்த வருந்தத்தக்க செயல் ஏற்பட்டிருப்பது கண்டிக் கத்தக்கது. மாணவியின் சாவிற்கு காரணமான ஒரு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்டவர் களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும். அந்த மாணவர்கள் 2 பேர் கல்லூரியை விட்டு உடனடியாக நீக்கப் படுவார்கள். ஈவ்டீசிங்கில் ஈடுபடுபவர்கள் யாரா னாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அமைச்சர் பொன்முடி தனது சொந்தபணம் ரூ.10 ஆயிரத்தை திவ்யாவின் தந்தை மணிவண்ணனிடம் வழங்கினார்.
source: http://www.maalaimalar.com
Monday, October 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment