Tuesday, October 13, 2009

பழிக்கு பழி வாங்குவதற்காக உடலில் தீ வைத்து கொண்டு காதலியை கட்டி பிடித்த சாமியார் இருவரும் கருகி பலியானார்கள்



சென்னை, அக். 13-

சென்னை ஒட்டேரி கொசப்பேட்டை வெங்கட திரி தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). இவரது கணவர் யுவராஜ். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.

விஜயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற சாமியாருடன் தொடர்பு வைத்திருந்தார். சங்கருடன் தாலி கட்டாத கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார். விஜய லட்சுமிக்கு வேறு சில ஆண் களுடனும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை சங்கர் கண்டித்துள்ளார். ஆனால் அவரோ நான் உனக்கு பொண்டாட்டி இல்லை. காதலி மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்று திமிராக பேசி உள்ளார்.

இப்படி அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி வேறொரு காதலனை பார்ப்பதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதை சாமியார் சங்கர் எதிர்த் துள்ளார். மேலும் கண்டித்து அடித்து உதைத்துள்ளார். ஆனால் அதையும் மீறி விஜயலட்சுமி வீட்டை விட்டு புறப்பட தயாரானார்.

திடீரென ஆவேசமான சங்கர் மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கொளுந்து விட்டு எரிந்த தீயுடன் ஓடிச்சென்று கள்ளக் காதலி விஜயலட்சுமியை கட்டி பிடித்தார். இதனால் அவர் மீதும் தீ பற்றியது.

விஜயலட்சுமி உடும்பு பிடியில் சிக்கியது போல் தப்பிக்க முடியாமல் அவதிப் பட்டார். அவரது உடலிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இருவரும் தீயில் கருகினர். பலத்த காயம் அடைந்த இருவரையும் சிகிச் சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.

ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல்ஸ்டேன்லியிடம் விஜயலட்சுமி மரணவாக்கு மூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-நான் மற்ற ஆண்களுடன் பழகுவதை தவறாக நினைத்து எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். அதன் பிறகு சாமியார் சங்கருடன் குடித் தனம் நடத்தினேன். அவரும் என்னை சந்தேகித்தார். வீட்டை விட்டு வெளியே புறப்பட தயாரான போது தீக்குளித்த அவர் என்னை கட்டி பிடித்து கொண்டு என் உடலிலும் தீ பரவ காரணமானார். ஆண் நண் பர்களின் தொடர்பு என் உயிருக்கு உலை வைத்து விட்டது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments: