
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் முத்து மகன் ராமமூர்த்தி. இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஓராண் டுக்கு முன் ராமமூர்த்தி மொபைல் போனில் பேச முயன்றபோது, அது தவறுதலாக கள்ளக்குறிச்சி அடுத்த அலம்பளம் கதிர்வேல் மகள் அபிராமியின் மொபைல் நெம்பருக்கு இணைப்பு கிடைத் தது. தொடர்ந்து இருவரும் மொபைல்போனில் ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே காதலித்து வந்தனர். தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த ராமமூர்த்தி, நேற்று மாலை அபிராமிக்கு போன் செய்தார். அப் போது அபிராமி கள்ளக்குறிச்சியில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைக்கு வருமாறு, ராமமூர்த்தியை அழைத் தார்.
இதற்கிடையே தனது தந்தை இறந்துவிட்டதால், ராமமூர்த்தியை தனக்கு திருமணம் செய்து வைக் கும்படி உறவினர்களிடம் அபிராமி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதை அறியாத ராமமூர்த்தி நேற்று மாலை கள்ளக்குறிச்சிக்கு வந்த போது, அவரை சுற்றி வளைத்த அபிராமியின் உறவினர்கள், மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். போலீசார் அறிவுரையின் பேரில் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள விநாயகர் கோவிலில் ராமமூர்த்தி, அபிராமியை நேற்று மாலை திருமணம் செய்து கொண்டார். முகத்தை பார்க்காமல் காதலித்து வந்த ராமமூர்த்தி தனக்கு ஏற்பட்ட திடீர் திருமணத்தால், செய்வதறியாது திகைத்தபடி மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப் பட்டார்.
1 comment:
பெண்ணின் அப்பனுக்கு கல்யாண செலவு மிச்சம்
Post a Comment