Thursday, October 22, 2009

டாடா நிறுவனத்தின் “நானோ” கார்களில் தீப்பிடிப்பதாக புகார்



டாடா மோட்டார் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த “நானோ” என்ற கார்களை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த கார்கள் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகின்றன. மிக குறைந்த விலை என்பதால் இந்த கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டினார்கள்.



ஆனால் இதுவரை விற்பனை செய்யப்பட்ட கார்களில் 3 கார்களில் தீப்பிடித்ததாக டாடா நிறுவனத்துக்கு புகார் வந்து உள்ளது.



காரில் சுவிட்சில் உள்ள எலக்ட்ரிக்கல் சர்க்யூட்டில் கோளாறு ஏற்பட்டதால் தீப்பிடிப்பதாக கூறப்படுகிறது.



தீப்பிடித்த கார்களில் 2 கார்களை வரவழைத்து டாடா நிறுவனம் பழுது நீக்கி கொடுத்துள்ளது.



இதே போல இதுவரை விற்பனை செய்த அனைத்து கார்களையும் பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளது.



அதே போல உற்பத்தி செய்துள்ள கார்களின் எலெக்டரிக் சர்க்யூட்டுகளையும் பரிசோதனை செய்ய உள்ளனர்.



இதுபற்றி டாடா நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, விற்ற கார்களை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை. முன் எச்சரிக்கையாக அனைத்து கார்களையும் பரிசோதித்து விட்டு திரும்ப கொடுத்து விடுவோம் என்றார்.



Source: http://www.maalaimalar.com

No comments: