Monday, October 26, 2009

நடந்து கொண்டே செல்போனில் பேசுவதால் நகை பறிகொடுக்கும் பெண்கள் அதிகரிப்பு


சென்னை, : செல்போனில் பேசியபடி நடந்து செல்லும் பெண்கள் உஷாராய் இருப்பது நல்லது. ஏனெனில், அவர்களை குறிவைத்துதான் வழிப்பறி திருடர்கள் வலம் வருகின்றனர் என்கிறது, மாநகர போலீஸ்.. வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டுக்கு திரும்பும்போது, ரோட்டில் நடந்தபடியே செல்போனில் பேசுவது வாடிக்கையாகி விட்டது. அக்கம்பக்கத்தில் நடப்பதைக்கூட கண்டுகொள்வதில்லை. நகைகளை அணிந்து, சாலைகளில் அலட்சியமாக செல்கின்றனர். இவர்களின் நடவடிக்கை திருடர்களுக்கு வசதியாகி விடுகிறது. வியாசர்பாடி போலீசார், லிங்கேஸ்வரன் என்ற திருடனை பிடித்தனர். அவனை விசாரித்தபோது, ‘பள்ளியில் படிக்கும்போது ஓட்டபந்தய வீரன். நடந்து செல்லும் பெண்கள் பலர் செல்போ னில் பேசியபடியே எதையும் கண்டுகொள்ளாமல் செல்வதை கவனித்தேன்.அவர்கள் பின்னால் ஜாக்கிங் செல்வதுபோல நகையை பறித்து விடுவேன்’ என்று கூறியிருக்கிறான். புகார் சொல்ல வரும் பெண்கள், ‘‘செல்போனில் பேசிக்கொண்டே போனேன். திடீரென்று பின்னால் இருந்து பைக்கில் வந்தவர்கள், செயினை பறித்துச் சென்று விட்டனர். பைக் நம் பரை கவனிக்கவில்லை’ என்று சொல்கின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நகைகளை பறிக்கக்கூடிய பைக் திருடர்களை பிடிப்பது காவல் துறைக்கு சவாலாக உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள், பழைய திருடர்கள் அல்ல; புதியவர்கள் என்பதுதான் அதிர்ச்சி. போலீசாரிடம் சிக்கியவர் பட்டியலை பார்த்தால், காவல் துறை அதிகாரி மகன்கள், இன்ஜினியரிங் மாணவர்கள், ஓட்டப் பந்தய வீரர்கள், பைக் ரேசர் கள் என்ற தகவல் கிடைக்கிறது. சென்னை நகரில் சமீபகாலமாக செயின் பறிப்பு அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, இரு மடங்கு செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. போலீசில் பிடிபடும் நபர்கள், ‘‘செல்போனில் பேசிக் கொண்டு செல்பவர்களை குறிவைத்துதான் செயினை பறிக்கிறோம்’’ என்று சொல்கின்றனர். ‘ஆடம்பர செலவுகளுக்காக, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்; ஜாலியாக செலவு செய்கின்றனர். பணம் காலியானதும் அடுத்த ரவுண்டுக்கு வருகின்றனர். பணம் தேவைப்படும் போது மட் டும் நகையை பறிப்பதால், அவர்கள் மீது சந்தேகம் வருவதில்லை. இதனால் எளிதில் சிக்க மாட்டார்கள். நடந்து செல்லும் பெண்கள் செல்போன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், செயின் பறிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்’ என்கின்றனர் மாநகர போலீசார்.

No comments: