
கோபி: கோபி அருகே குடிபோதையில் தக ராறு செய்த கணவரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், கோபி அடு த்த கொளப்பலூர் அருகேயுள்ள புளி யங்காட்டூர் அய்யன்காடு பகுதியை சேர்ந்தவர் மாகாளி மகன் பழனிசாமி (46). இவரது மனைவி ராசம்மாள் என் கிற சென்னியம்மாள் (49). இவர்க ளுக்கு நாச்சிமுத்து (24), முத்துசாமி (26) ஆகிய மகன்களும், பாப்பா என்கிற ஈஸ்வரி (20) என்ற மகளும் உள்ளனர். முத்துசாமி, ஈஸ்வரி இரு வரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். மகன் நாச்சிமுத்து, ராஜஸ்தானில் ரிக்வண்டி தொழிலாளியாக உள்ளார். பழனிசாமியும், ராசம்மாளும் வீட்டில் அய்யன்காட்டில் தனியாக வசித்து வந்தனர். பழனிசாமிக்கு குடிப் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்த துடன், தகராறு வரும்போதெல்லாம் சென்னியம்மாளை கொலை செய்து விடுவதாக மிரட்டியும் வந்துள்ளார். இந்நிலையில் ராசம்மாள், அயலூர் ஊராட்சி துணைத்தலைவர் ராஜாமணியிடம் தனது கணவரை எரித்து கொன்றுவிட்டதாக சரண் அடைந்தார். ராஜாமணி, அவரை சிறுவலூர் கா வல் நிலையத்தில் ஒப்படைத்தார். கோபி இன்ஸ்பெக்டர் மணிமாறன் சென்னியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசில் ராசம்மாள் அளித்த வாக்குமூலத்தில், குடிப்பழக்கம் காரணமாக எனது கணவர் அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுகிழமை மட்டன் எடுத்துக்கொண்டுவந்து சமைத்து வைக்கும்படி கூறினார். நானும் சமை த்து கொடுத்தேன். மது குடித்துவிட்டு சாப்பிட்டார். பின்னர் என்னிடம் தக ராறு செய்தார். இதனால் எங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னை தீவைத்து கொளுத்த மண்எண்ணெய் கேனுடன் துரத்தினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்து அவரை தாக்கினேன். தலையில் அடி பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதன் பின்னரும் எனக்கு ஆத்திரம் அடங்காததால் அவரை வீடு அருகிலுள்ள குப்பை குழிக்கு இழுத்து சென்று குழியில் தள்ளி கேனிலிருந்த 5 லிட்டர் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தேன். பின்னர் மீதமுள்ள குப்பைகளை போட்டு எரித்த இடத் தை மூடிமறைத்து விட்டேன். 3 நாட்க ளுக்கு பிறகு வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கம் உள்ளவர் கள் சந்தேகம் அடைந்து என்னிடம் விசாரித்தனர். இது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. இதனால் பஞ். துணைத் தலைவரிடம் மூலமாக போலீசில் சரண் அடைந்தேன். குடிகார கணவனை மனைவியே எரித்துக் கொன்ற சம் பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.
Source : www.dinakaran.com
1 comment:
என்ன சொல்லியும் திருந்தாத குடிகாரர்கள் - வாழ்ந்தும் பயன் இல்லை. கொல்ல வேண்டாம் - ஆனால் சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை அளித்துவிடலாம்.
Post a Comment