
தி.மலை, : திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அடுத்த நாவக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி நாகம்மாள்(30). திருமணமாகி 13 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு தெய்வானை(12), அரவிந்த்(10), சத்யா(7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முருகன் கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு சென்றார். அங்கும் போதிய கூலி கிடைக்காததால் ஊர் திரும்பினார். வறுமையால் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த நாகம்மாள் மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில்,நேற்று முன்தினம் விஷத் தழையை அரைத்து, குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தார். சிறுது நேரத்தில் குழந்தைகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்ததை பார்த்து பதறிய நாகம்மாள் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நாகம்மாளும், தெய்வானையும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த மனைவி, மகளின் சடலங்களை பார்த்து முருகன் கதறித் துடித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Source : www.dinakaran.com
No comments:
Post a Comment