Wednesday, October 28, 2009

காரை கண்டால் சல்யூட் மாணவர்களுக்கு உத்தரவு


ஹியாங்பிங், : சீனாவில் திடீர் திடீரென விசித்திர உத்தரவுகள் பறப்பது சகஜம். லேட்டஸ்டாக ஒரு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், சாலையில் கார் வருவதைக் கண்டால் நின்று சல்யூட் அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீன பள்ளிக்கூடங்களின் மைதானங்களில் மாணவர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும். ஆனால், பள்ளி வராண்டாவில் ஓடக்கூடாது. மணி அடிப்பதற்கு முன் சீட்டில் இருக்க வேண்டும். தவறினால், ஆப்சென்ட். கேள்வி கேட்க விரும்பினால், கையை தூக்கி அதைத் தெரிவித்து, அனுமதி பெற்ற பிறகே கேட்க வேண்டும். இப்படி பள்ளி மாணவர்களுக்கு கூடை கூடையாக விதிமுறைகள் உண்டு. இப்போது ஹியாங்பிங் பகுதியின் லுலாங் தொடக்கப் பள்ளியில் ஒரு விசித்திர உத்தரவை கல்வி அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். அதாவது, சாலையில் ஓடும் கார்களுக்கு மாணவர்கள் சல்யூட் அடிக்க வேண்டும்! அப்படிச் செய்வதால் சாலை விபத்துகள் குறையும், மாணவர்களுக்கு மரியாதை தெரியும் என்று அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர். எனினும், இன்டர்நெட்டில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். Ôமாணவர்கள் இனி படிக்க நேரமிருக்காது. சாலையில் நடந்தால் அணிவகுத்து வரும் கார்களுக்கு சல்யூட் அடித்தே அவர்கள் கை ஓய்ந்து விடும், பரிதாபம்Õ என்று ஒருவர் நக்கலடித்துள்ளார். இதுபற்றி சீன கல்வி நிபுணர் ஒருவர் கூறுகையில், உள்ளூர் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவது சீனாவில் சகஜம். அப்படி அனுமதிக்கப்படுவதே இதுபோன்ற விசித்திர உத்தரவுகளுக்கு காரணம் என்றார்.

No comments: