
இந்திய ஜனாதிபதி பிரதீபாபட்டீல் இங்கிலாந்து சென்றுள்ளார். அவருக்கு இங்கிலாந்து ராணி சார்பில் பக்கிங்காம் அரண்மனையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள பிரபலமான இந்தியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து 400 முக்கிய பிரமுகர்கள் அங்கு குவிந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் அணிந்திருந்த பேஜ்களில் அவர்களுடைய பெயருடன் படேல் என்ற குடும்ப பெயரும் காணப்பட்டது.
இதை கண்ட இங்கிலாந்து இளவரசர் பிலிப், படேல் கோஷ்டி எல்லாம் இங்கு குவிந்து விட்டது என்று கேலியாக குறிப்பிட்டார். இதனால் ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் வருத்தம் அடைந்தனர்.
இந்திய வர்த்தக அமைப்பின் தலைவர் அதுல்படேல் இது பற்றி கூறும் போது, இங்கிலாந்து இளவரசர் கிண்டல் செய்த வீதம் படேல் என்ற குடும்ப பெயரை தாங்கிய அனைவரையும் அவமதிப்பதாக உள்ளது. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானை அடுத்து இங்கிலாந்தில்தான் பெருமளவு பட்டேல்கள் வாழ்கிறார்கள். இங்கிலாந்தில் மட்டும் 6 லட்சத்து 70 ஆயிரம் படேல் குடும்பத்தினர் உள்ளனர். எல்லோருக்கும் இது அவமதிப்பு என்றார்.
“படேல்” சமூகத்தினர் பற்றி இங்கிலாந்து இளவரசர் பிலிப் கேலி செய்தது அந்த சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து இளவரசர் மீது சர்ச்சையையும் கிளப்பி உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து பொது அமைப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் கிரஹாம் சுமித் கூறியதாவது:-
இங்கிலாந்தில் படேல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அரண்மனையில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த பெரும் பாலானோர் படேல் என்பதைத்தான் இங்கிலாந்து இளவரசர் அப்படி குறிப்பிட்டார். அது நகைச் சுவைக்காக சாதாரணமாக சொன்னதுதானே தவிர யாரையும் கேலி செய்வதற்காக சொன்ன வார்த்தை அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment