Friday, October 30, 2009

தெண்டுல்கர் ஒருநாள் போட்டியை குறைத்து கொள்ள வேண்டும்; ஆலன் பார்டர் யோசனை


ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட்டில் தெண்டுல்கர் செய்த சாதனை மிக பிரமாண்டமானது. நாட்டுக்காக அவர் 20 வருடம் ஆடிகொண்டிருப்பது சாதாரண சாதனை அல்ல. சர்வதேச போட்டிகளில் ஆடும்போது பல்வேறு நெருக்கடிகள் ஏற்படும். அதை சிறப்பாக சமாளித்து இத்தனை ஆண்டு காலம் நீடித்து இருப்பது பெரிய விஷயம்.

அவர் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலம் தொடர வேண்டும். இதற்காக ஒரு நாள் போட்டிகளை குறைத்து கொள்வது நல்லது. ஒருநாள் போட்டிகளில் அதிகம் ஆடினால் அது பாதிப்பை ஏற்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.

மற்ற வீரர்களை போலவே அவருக்கும் காயத்தால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தால் எல்லாம் நல்லபடியாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய ஆட்டம் மெருகேறி வருகிறது. இது எல்லா வீரர்களுக்கும் சாத்தியமானது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: