
நாக்பூர் போட்டியில் டோனி அதிரடியாக ஆடியது குறித்து இந்திய அணி தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:- நாக்பூரில் இந்திய அணியின் ஆட்டம் எதிர்பாராத அளவுக்கு அபாரமாக இருந்தது. எல்லா வீரர்களுமே எந்த குறைகளும் சொல்ல முடியாமல் சிறப்பாக ஆடினார்கள்.
பழைய டோனியை இந்த ஆட்டத்தின் மூலம் மீண்டும் பார்த்தேன். மிக பிரமாண்டமாக ஆடினர். அதேபோல காம்பீர், ஷேவாக் மற்ற வீரர்களின் ஆட்டமும் பாராட்டும் படியாக இருந்தது.
ஆஸ்திரேலியா மிக வலுவான அணி. இதை 99 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சாதாரண விஷயம் அல்ல. இந்த வெற்றி மூலம் இனிவரும் அனைத்து போட்டிகளையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment