
கராச்சி, அக். 27-
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மனைவி ஹியூமா சிறுநீரக கோளாறால் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
ஹியூமா உடல் சென்னையில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்டது. வாசிம் அக்ரமின் சொந்த ஊரான லாகூரில் அஞ்சலிக்கு பிறகு உடல் அடக்கம் நடந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகேப்டன் யூனுஸ்கான், அப்ரிடி, முன்னாள் கேப்டன்கள் சயீத் அன்வர், இன்ஜமாம், வீரர்கள் மொயின்கான், இஜாஷ் அகமது, ஜாகீர்கான், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க சேர்மன் இஜாஷ் பட் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதி நிகழ்ச்சியில் குடும்பத்தினர் ரசிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஹிலானி, மாநில கவர்னர்கள், முதல்- மந்திரிகள் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தனர்
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment