
மும்பையை சேர்ந்தவர் நாராயண் நாயர் (வயது 31). இவர் மீது 2008-ம் ஆண்டு தொழிலாளி ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த கொலை வழக்கில் தனக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் சாட்சியங்களில் சந்தேகம் இருந்ததால் குறைவான தண்டனை கிடைத்தது.
இதற்காக நாராயண் நாயர் மகிழ்ச்சி அடைவார் என்று நினைத்தால் அதற்கு பதிலாக அவர் வேதனை அடைந்தார். நீதிபதியிடம் அவர் எனக்கு 7 ஆண்டு வேண்டாம், ஆயுள் தண்டனை கொடுங்கள் என்று கெஞ்சினார்.
அதற்கு அவர் சொன்ன காரணம்தான் எல்லோ ரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
ஜெயிலில் 7 ஆண்டு இருந்து விட்டு வெளியே வரும்போது எனக்கு சாப்பாட்டுக்கு வழி இருக்காது. எனவே ஆயுள் தண்டனையே கொடுத்து வாழ்நாள் முழுவதும் ஜெயிலிலேயே வையுங்கள் என்று பரிதாபமாக கேட்டார். ஆனால் அவருடைய கோரிக்கைக்கு நீதிபதி செவி சாய்க்கவில்லை.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment